loading
0%
Bhopal Tamil Sangam is a registered society under the Societies registration Act of the Madhya Pradesh Society Registrikaran Adhiniyam 1973 of 44 and the registration no.27234/13 dated 4-9-2013. And also it is affiliated to the Ulagath Tamil Sangams Madurai and Organisation of All India Tamil Sangams Chennai.
இந்தியாவின் பண்பாட்டின் மையமாகத் திகழும் தமிழர்கள், போபால் மாநகரத்தில் வேலை வாய்ப்பு காரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள். நம் தாய் மண்ணை விட்டு, நீராலும், நிலத்தாலும் பெயரளவில் நாம் பிரிந்தாலும், மொழியாலும், இனத்தாலும் நாம் அனைவரும் தமிழினம் என்பதை கருத்தில்கொண்டு, அந்தவகையில் போபாலில் வசித்து வரும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகிய நற்பண்புகளை நம்மிடையே பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ளவும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், ஒரு பொதுவான தளத்தை உருவாக்க வேண்டுமென்றும், போபாலில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கைகோத்து போபால் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் நாள் 2013 - ம் ஆண்டு மத்தியப் பிரதேசம் சொசைட்டி பதிவாளர் அதினியம் 1973இன் 44 - சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ், போபால் தமிழ்ச் சங்கம் பதிவு செய்யப்பெற்ற முதலான சங்கமாகும் இதன் பதிவு எண் 27234/13.
தமிழக அரசு உலகத் தமிழ்ச் சங்கத்தில்லும் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் பேரவையிலும் போபால் தமிழ்ச் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நெகிழ்வோடு தெரிவிக்க விரும்புகிறோம். பதிவு செய்யப்பெற்ற இந்த அமைப்பு சாதி மதம் மற்றும் அரசியல் கட்சி மாறுபாடுகளுக்கப்பால் இயங்கிக்கொண்டு வருவதாகும்.
தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ்ப் பண்பாட்டையும் உடன் எடுத்துச் செல்லும் உயரிய தன்மையைக் கொண்டவர்கள் என்பதால் தமிழர் திருநாளான தைப்பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது, சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது, தமிழ்ச் சிறுவர்களுக்குக் கோடை விடுமுறை நாட்களில் தமிழைப் பயிற்றுவிக்கின்றோம், இசை நடனம், தேசிய விழாக்கள், திருமண சேவைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி ஆகியவற்றைக் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் சங்கம் நடத்திக்கொண்டு வருகிறது. அன்பின் அடையாளமாக அவர்களுக்கு நினைவு பரிசுகள், சான்றிதழ்கள், ஊனமுற்றோருக்கு முச்சக்கர வண்டிகள், பலவீனமான தேவைப்படும் குழந்தைகளுக்கான சீருடைகள், பள்ளிப் பைகள், எழுதேடுகள், எழுது பொருள்கள் போன்றவை இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழறிஞர்கள், கலைஞர்கள் வரும்போது அவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சிகளையும், விருந்தினர் உரையாடல்கள், பட்டிமன்றம் போன்ற பல விழாக்களை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம். நம் மொழி, கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும் நம் போபால் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகிறது.
போபால் தமிழ்ச் சங்கம், கலாச்சார மற்றும் மனிதாபிமான நோக்கங்களுக்காக நிதி, நன்கொடைகளை திரட்டவும், சேகரிக்கவும், நன்கொடை கொடுக்கவும், போபால் மத்திய பிரதேசத்தில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழர்களுக்கான கலாச்சார அடையாளத்தை உருவாக்கவும், செம்மொழியான தமிழ் மொழியை மேம்படுத்தவும், தமிழ் சமூகத்தின் சிந்தனைகளைப் பிறிதிபலிக்கவும், தமிழின்பால் ஆர்வத்தை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு அவர்களின் தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஒற்றுமையாக அனைவரையும் அனைத்து ஒன்றாக இயங்கி கொண்டுவருகிறது.
ஜனவரி 19 ஆம் நாள் 2020 ஆம் ஆண்டு போபால் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் முதன்முறையாக போபாலின் வரலாற்றில், தமிழக அரசின் சார்பாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் அனுப்பப்பட்டது கிராமிய கலைக்குழு. இந்தக்குழுவின் பரத கலைஞர் பரத நாட்டியம் மிகச்சிறப்பாக ஆடினார்கள். கரகாட்டம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், நடனம், பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளை மக்கள் மனதை கவரும் வகையில் மிகச் சிறப்பாக வழங்கி சிறப்பித்தனர். நடன நிகழ்ச்சி விழா அரங்கை பார்வையாளர்களின் கரவோசையால் அதிர வைத்தது, பார்வையாளர்களை மகிழ்வித்தனர். போபாலில் நடத்திய முதல், தமிழக அரசின் சார்பாக அனுப்பப்பட்ட கிராமிய கலைக்குழு சரித்திரம் நாடகம் இது. தமிழக அரசு அனுப்பிய சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் வாய்ப்பும் மற்றும் வருகை தந்த அதிகாரிகளை கௌரவிக்கும் அருமையான வாய்ப்பும் போபால் தமிழ்ச் சங்கத்திற்கு கிடைத்தது.
ஜனவரி 22 ஆம் நாள் 2023 ஆம் ஆண்டு போபால் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் முதன்முறையாக போபாலின் வரலாற்றில், தமிழக அரசின் சார்பாக, தமிழக அரசு அனுப்பிய அயலகத் தமிழர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி திரு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பிரதம விருந்தினராக விழாவில் பங்கேற்றார். மத்தியப் பிரதேசம் அரசின் சார்பாக மருத்துவக் கல்வி துறை மாண்புமிகு அமைச்சர் திரு விஸ்வாஸ் கைலாஷ் சாரங் அவர்கள் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார். மாநாட்டுத் தலைவர் லயன் கிளப், நிர்வாக இயக்குநர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் MJF லயன் எம். அகர்சந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார். விருத்தாசலம் தமிழ்நாடு லயன் கமிட்டி குழுவினர்கள் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார்கள் மற்றும் பல்வேறு ஆட்சியாளர்கள் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார்கள். மாநாட்டுத் தலைவர் லயன் கிளப் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் MJF லயன் எம். அகர்சந்த் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சமூக மற்றும் கலாச்சார சேவைக்காக பாராட்டி போபால் தமிழ் சங்கத்திற்கு வழங்கப்பட்ட சர்வதேச ஜனாதிபதியின் பாராட்டு சான்றிதழை எங்களுக்கு வழங்கியுள்ளனர். மாண்புமிகு அமைச்சர் செஞ்சி திரு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பேசுகையில் போபால் தமிழ்ச் சங்கத்தை மிகவும் பெரிதும் பாராட்டினார். இரு மாநிலங்களுக்கான அமைச்சர்களும் போபால் தமிழ்ச் சங்கத்தின் கலை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்டது பெரு நிகழ்வாகும் அவர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்ற சங்கமாக போபால் தமிழ்ச் சங்கம் எழுந்து நிற்கிறது. இரு மாநிலங்களுக்கான அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த மைல்கல் விழாவில் தமிழர்களின் வளர்ச்சியிலும் தமிழர்களின் பங்கு என்றும் என்றும் போற்றப்படும் என்று புகழ்ந்துரைத்தார்கள். மாணவ, மாணவிகளும் கிராமிய நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிறப்பு மிக்க இந்த மிகப்பெரிய விழாவில் போபால் தமிழ்ச் சங்கத்திற்க்கா தமிழ் மையம் கட்டுவதற்கு அன்பளிப்பு வழங்க ஏற்பாடுசெய்யலாம் என்று மாண்புமிகு அமைச்சர் செஞ்சி திரு கே.எஸ்.மஸ்தான் அவர்கள், மற்றும் MJF லயன் எம். அகர்சந்த் அவர்கள் உறுதி கூறினார்கள். மேடை கலைநிகழ்ச்சிகள் பார்வையாளருக்கு இரசிகர்களுக்கு ஒரு நல்விருந்தாக அமைந்தது என்பதற்கு முதல் காட்சி அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் காட்சியாக இருந்ததே சான்று. போபாலில் நடத்திய முதல் தமிழக அரசின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் அனுப்பப்பட்டது சரித்திரம் இது.
போபால் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து போபாலில் தமிழரின் அடையாளமாகவும் குரலாகவும் நிலைபெறத் தங்கள் ஆதரவே உயிர்நாடி. தங்கள் கருத்துகளை போபால் தமிழ்ச் சங்கத்தின் மின்னலங்சலுக்கு அனுப்பலாம். போபால் தமிழ்ச் சங்கம் என்றும் என்றும் நெஞ்சார்ந்த நன்றியை வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்ளும். இந்த அமைப்பின் நலனுக்காக சுயநலம் பாராமல் உழைத்த அனைவரையும் நாங்கள் நெஞ்சாற நினைத்து ஒவ்வொருவருக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கின்றோம். வாழ்க தமிழ்.
போபால் தமிழ்ச் சங்கம் செயற்குழு - ஆ. சாமிதுரை – பொதுச் செயலாளர் - 9303104208
Fostering cultural integration by celebrating Tamil festivals and traditions, ensuring that Tamil families are an integral part of Bhopal’s diverse cultural landscape.
Promoting Tamil language programs and cultural awareness initiatives to ensure that future generations retain their cultural identity and language.
Providing support to our community members in need, through social welfare programs that aim for a more inclusive society where Tamil people flourish.
At BTS, our success is reflected in the stories of our members. Their journeys are a testament to the impact we have on the Tamil community in Bhopal. Here are some member testimonials that demonstrate how BTS has made a positive difference in the lives of many: